G
Gowthaman V


இந்த வாரம் மூன்று நாட்கள் கடந்தும் இன்றுவரை யாரும் வரவில்லை. யார் வந்து மாட்டுவார்களோ என்று வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டு இருந்தது நுழைவு வாயில், உள்ளே மர்மங்களை வைத்து, வெளியே அழகை உதிர்த்து.


Kısa Hikaye Sadece 18 yaş üstü için.

#]
Kısa Hikaye
0
1.0k GÖRÜNTÜLEME
Tamamlandı
okuma zamanı
AA Paylaş

எனக்குள் வா!

வானம் மழையை வார்த்து ஓய்ந்து பளிச்சென்று வெண்பட்டுப்போல் இருந்தது. காற்று சில்லென்று உடலை தழுவி சென்றது. மண்வாசனையோ எனக்கீடில்லை என்றது. தாரா வருணை இறுகி அணைத்துக்கொண்டு, தங்களை மறந்து இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவித்து கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்துக்கொண்டு இருந்தனர்.தாராவும் வருணும் காதலித்து பல போராட்டங்களுக்கு பின் திருமணம் முடிந்து, தேனிலவிற்கு புது அனுபவமாக இருசக்கர வாகனத்தில் பல இடங்களுக்கு சென்று தேனிலவை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் வரும்போது வழி மாறி காட்டுமலைப்பகுதியில் பயணம் செய்தனர். என்னதான் காட்டு மலைப்பகுதி அமைதியாக பயமாக இருந்தாலும் இவர்கள் புது ஜோடிகள் என்பதால் அந்த அமைதியையும் ரசித்தவாறே சென்றுக்கொண்டிருந்தனர். வழியில் பலர் இவர்களை ஏதோ வேற்றுகிரகத்தினரை பார்ப்பது போல பார்த்துவிட்டு தத்தம் வேலைகளில் கவனம் செலுத்தினர்.ஒரு சிலரோ, பக்கத்தில் உள்ள நபர்களிடம் கிசுகிசுத்தனர்.


ஆடு மேய்க்கும் சிறுவனோ, " இடப்பக்கம் மட்டுமே கண்கள் பார்க்கட்டும்" என்றான்.அதன் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை. அதுவரை இயற்கையில் லயித்திருத்த அவர்களுக்கு இது ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது. பாதை முன்னேற முன்னேற, வெள்ளை உடையணிந்த சிலர் இருவரை மடக்கி பிடிக்க அந்த இருவரும் அவர்கள் பிடியிலிருந்து தப்பிக்க திமிறி கொண்டிருந்தனர். இவர்களை பார்த்ததும் அந்த இருவர் இவர்களை நோக்கி சத்தமாக கத்த ஆரம்பித்தனர். அவர்கள் கத்தியது, "வலது பக்கம் கவனிக்காதே, மாயங்களுக்கு இரையாகாதே, திரும்ப முடியாது" என்றனர். இது தாராவையும் வருணையும் பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.இருந்தாலும் வீடு திரும்பும் எண்ணத்தில் இருந்ததால் மேற்கொண்டு திகிலோடு சென்றனர். வழியில் மனநல காப்பகத்தை கண்டு வாகனத்தை நிறுத்தி இறங்கி ஒருவருக்கொருவரை பார்த்து சிரித்துக்கொண்டனர். வருண் தாராவிடம், " அவர்கள் மனநலம் சரியில்லாதவங்க அதான் அப்படி நடந்துகிட்டாங்க. நானும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்" என்றான். அதற்கு தாராவோ, சற்று யோசித்துவிட்டு கேட்டாள், " அப்போ! வரும் வழியில் நம்மை வித்தியாசமாக பார்த்தார்களே! கிசுகிசுத்தார்களே! அந்த ஆடு மேய்க்கும் பையனோ இடப்பக்கமே கண்கள் இருக்கட்டும் என்றானே! ". வருணோ, " நம்முடைய உடைகள் வித்தியாசமாய் இருந்ததால் அவர்கள் அப்படி செய்து இருப்பார்கள். அந்த சிறுவன், ஆடு மேய்ப்பவன் ஏதோ விளையாடிருப்பான்" என்றான்.


ஒருவழியாக தங்களை சமாதானம் செய்துக்கொண்டு அங்கிருந்து முன்னேற இருசக்கர வாகனத்தை கிளப்பினர். ஆனால் தாராவிற்கோ உள்ளுணர்வு ஏதோ சரியில்லை என்று சொல்லியது. மேலும் அவளுடைய இடது கண் இமை துடிக்க ஆரம்பித்தது. அவள் அம்மா அடிக்கடி கூறுவாள் இடது கண் துடித்தால் ஏதோ அசவுகரியம் என்று. வருணிற்கு இதன் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை அதனால் அவனிடம் சொல்வது வீண் என்று விட்டுவிட்டாள். அவள் மனதோ," அப்படி என்னதான் அங்கு உள்ளதோ " என்று ஆர்வத்திலும், பயத்திலும் வேகமாக துடிக்கத் தொடங்கியது. வருணோ மீண்டும் இயற்கையில் லயித்தபடி வாகனத்தை இயக்கி கொண்டிருந்தான்.உண்மையில் அங்கு இருப்பது என்ன? அந்த இருவர் யார்? அந்த மக்கள் ஏன் கிசுகிசுத்தனர் ? அந்த சிறுவன் ஏன் அப்படி சொன்னான்?


வருடங்கள் பின்னோக்கி பார்த்தால்,


அது ஒரு அழகான பசும்புற்கள் போர்த்திய நிலம், பக்கத்தில் கண்ணாடி இழைகள் போல ஓடை ஓடியது, ஓடையில் மீன்கள் துள்ளி விளையாடியது எங்களை விட மகிழ்ச்சியான உயிர்கள் வேறில்லை என்று, ஆங்காங்கே மரங்கள் பசுமையாய் காற்றில் அசைந்தாடியது, செடிகளில் பூக்கள் நறுமணத்தை வாரி இறைத்தது, சுற்றும் இவைகளுக்கு காவலாய் உயர்ந்து நின்றது மலைகள் போன்ற கற்கள். காற்று வீசுகையில் அங்கே நிற்பது கூட சொர்கம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.ஆனால் அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்பார்கள். ஆம்! அங்கே யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு வீடு உள்ளது. அந்த ஓடையின் தண்ணீர் உடம்பில் தண்ணீர் ஈரமாய் இருக்கும் வரையில் மட்டுமே அந்த வீடு அங்கே வருபவர்களுக்கு தெரியும், ஈரம் உலர்ந்த பின் அந்த வீடு மறைந்து விடும் கண்களுக்கு புலப்படாது. இது வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு மர்மம் என்றால், ஈரத்துடன் உள்ளே சென்றவர்கள் இதுவரை திரும்பியதில்லை! ஏன் என்றால் உள்ளே சென்ற பின் ஈரம் உலர்ந்துவிடும், வீட்டோடு சேர்ந்து அவர்களும் மாயமாய் மறைந்துவிடுவர். இதுவரை உள்ளே சென்ற எவரும் திரும்பியதில்லை.ஆக, அந்த இடத்திற்கு விவரம் அறிந்த எவரும் செல்வதில்லை. விவரங்கள் அறியாதவர்களுக்கு அந்த இடத்திற்கு செல்லும் பாதை நுழைவில் ஒரு எச்சரிக்கை பலகை மட்டும் வைத்து குறுக்கே ஒரு பெரிய மரத்தண்டை போட்டு இருந்தார்கள். விவரங்கள் இல்லாமல் வெறுமனே, அபாயகரமான பகுதி! என்று மட்டும்!ஆனால் பலர் அந்த இடத்திற்குள் எப்படியாவது செல்லவே விரும்புவர். ஏன்னென்றால் நுழைவு இரு மலைப்போல உள்ள பாறைகளுக்கு நடுவே இருக்கும். உள்ளே சென்றவுடன் அழகான அந்த இடத்தை சுற்றி ஓடை, பாம்பு தன் முட்டைகளை அடைக்காப்பது போல ஓடும்.


அதையும் மீறி பலர் அந்த இடத்திற்குள் திருட்டுதனமாய் சென்றவர்கள் திரும்பியதில்லை. ஏன் என்றால் ஓடையை கடந்தால் மட்டுமே புல்வெளிக்குள் செல்ல முடியும் என்ற நிலை. அதனால் ஓடையிலயில் இறங்கியவுடன் அழகான வீடு தெரியும் மற்றவைகளை மறந்து வீட்டிற்குள் செல்வர், சென்றவுடன் ஈரம் காய்ந்து விடும் வீடும் மறைந்துவிடும்.அந்த வீட்டிற்குள் செல்லாமல் திரும்பி வந்தவர்கள் இரண்டே நபர்கள் ஒருவன் விக்ரம் இன்னொருவர் வயதான தாத்தா தயாளன் மட்டுமே. ஆனால் அவர்களை மனநலம் குன்றியவர்கள் என்று காப்பகத்தில் அடைத்து வைத்திருந்தனர். ஏன் என்றால் தன் நண்பர்கள் தோழிகள் அங்கே இருந்த வீட்டுடன் மறைந்து விட்டனர், போகும் போது அழகாய் காட்சியளித்த வீடு மற்றும் அந்த இடம், திரும்பும்போது அகோரமாய் காட்சியளித்தது என்றும் தன் நண்பர்கள் தோழிகளை காப்பாற்ற வேண்டும் என்றும் அங்கே ஒரு அழகான சூன்யக்காரி அகோரமாய் சிரித்தாள் என்றும் அவள் வாயிலிருந்து இரத்தம் வழிந்தது என்றும் புலம்பி அழுது புரண்டதன் விளைவு.ஆம்! போகும் போது, தண்ணீரில் கால் வைக்கும் போது அழகாய் காட்சி தரும் வீடு தப்பி தவறி திரும்பும் போது தண்ணீரில் கால்வைத்து பார்த்தால் அந்த இடமே தலைகீழாக தெரியும். ஆம்! அழகிய வீடு பேய் வீடு போல காட்சி தரும், இடமோ திகில் மர்மங்கள் நிறைந்த சுடுகாடாய் காட்சி தரும்.அந்த இருவர் இருந்த காப்பகமோ அந்த நுழைவு எச்சரிக்கை பலகைக்கு 1கிமீ தூரம் முன் தான் இருந்தது. அந்த காப்பகத்தை தாண்டிதான் இந்த மர்மமான இடத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். மேலும் பலர் தவறுதலாக மாட்டிக்கொள்வதும் உண்டு. ஏன் என்றால் அங்கு இருவழிகள் இரட்டை பிறவி போல பிரிந்து செல்லும், ஒன்று ஊருக்கு வெளியே செல்வது,இன்னொன்று இந்த உலகத்தை விட்டு செல்வதற்கு அதாவது மர்ம இடத்திற்கு.என்னதான் இவ்வளவு மர்மங்கள் நிறைந்த இடத்திற்கு செல்ல8/ தடை விதித்து இருந்தாலும் அதன் மாய அழகில் மயங்கி திசை திரும்பி திசை மாறி போனவர்கள் ஏராளம். மாதத்திற்கு இரண்டு மூன்று நபர்களாவது சென்று மாட்டிக்கொள்வார்கள். பெரும்பாலும் இங்கே வந்து சிக்குவது காதலர்களும், இளம் கல்லூரி மாணவர்களும், புதிய அனுபவம் தேடி செல்பவர்களும், சமூக ஊடகங்களில் புதிய சம்பவங்களை பதிவிடும் நபர்கள் தாம். இதை கூட அங்கே பக்கத்தில் ஆடு மாடு மேய்ப்பவர்கள் தான் சொல்வார்கள். எண்ணிக்கை கூட தோராயம் தான் உண்மையான எண்ணிக்கை அந்த வீட்டிற்கு மட்டுமே தெரியும்.இந்த வாரம் மூன்று நாட்கள் கடந்தும் இன்றுவரை யாரும் வரவில்லை. யார் வந்து மாட்டுவார்களோ என்று வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டு இருந்தது நுழைவு வாயில், உள்ளே மர்மங்களை வைத்து, வெளியே அழகை உதிர்த்து.வருண் மற்றும் தாரா இந்த மர்ம இடத்தை பற்றி ஏதும் அறியாது இதை நோக்கி, சிங்கத்திடம் சிக்கும் முன், புல்வெளியில் துள்ளி விளையாடும் இளமான்களை போல வாகனத்தில் முன்னேறி வந்து கொண்டிருந்தனர்.பதுங்கி பாயும் சிங்கம் போல் மர்ம வாயில் காத்துக்கொண்டிருந்தது.


11 Eylül 2021 17:27:07 0 Rapor Yerleştirmek Hikayeyi takip edin
0
Son

Yazarla tanışın

Yorum yap

İleti!
Henüz yorum yok. Bir şeyler söyleyen ilk kişi ol!
~

İlgili Öyküler